யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அருச்சுனா எம்பி இன் அறிவிப்பு
யாழ் போதனா வைத்தியசாலை சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட வைத்திய சாலையில் வேலை செய்கின்ற எந்த ஊழியர் சம்பந்தமான எழுத்து மூல முறைபாட்டினை தரும் இடத்தில் பிழை செய்பவர்களுக்கு எதிரான சகல சட்ட நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் என யாழ் மாவட்ட சுயேட்சை எம்பி அருச்சுனா கூறியுள்ளார்.
drarjunaa@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0761071065 என்ற தொலைபேசி எண்ணிற்கு அனுப்பிவைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊழியர்கள் வழங்கும் முறைப்பாட்டிக்கு மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் என்னால்ஆன முழு உதவிகளும் வழங்கப்படும் எனவும் அருச்சுனா எம்பி கூறியுள்ளார்.
இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை சம்பந்தமான முறைப்பாடுகளை நேரில் ஆராய்வதற்கு நேரில் சென்றபோது பாதிக்கப்பட்டவர்கள் எழுத்து மூலம் முறைப்பாட்டினை வழக்ங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 170 க்கு மேற்பட்ட இளம் சந்ததியினர் தன்னிடம் அவ்வாறு கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் அருச்சுனா எம்பி மேலும் கூறியுள்ளார்.