விமல் வீரவன்சவிற்கு மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் அழைப்பு
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், வாக்குமூலம் பெற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில், விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.