போட்டோ லைப்ரரி வசதியில் வாட்ஸ்அப்பில் ஒரு சூப்பர் அறிமுகம்
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதற்கான போட்டோ லைப்ரரி வசதியில் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம் உங்கள் தொடர்புகளுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாகப் பகிரலாம்.
WABeta இன்ஃபோ அறிக்கையின்படி, இந்தப் புதிய அப்டேட் பயனர்களுக்கு உதவும். புது அனுபவத்தைத் தரும். ஃபோட்டோ லைப்ரரி அம்சத்தை இன்னும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறுகிறது.
இந்தப் புதிய அப்டேட்டில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர, அட்டாச் ஃபைல்ஸ் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும். அதன் பிறகு, அது உங்களை புகைப்பட நூலகப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதன் பிறகு நீங்கள் புகைப்படங்களைப் பகிரலாம். இந்த புதிய அம்சத்தின் மூலம் போட்டோ லைப்ரரி ஆப்ஷனை கிளிக் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
இது பயனர்களுக்கு ஒரு படியைக் குறைக்கிறது மற்றும் சிறிது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.