இலங்கை சந்தைக்கு புதிய லொத்தர் சீட்டுக்கள் அறிமுகம்!
இலங்கையில் புதிய லொத்தர் சீட்டுகளான 'மெகா மில்லியனர்ஸ்' மற்றும் 'மெகா 60' சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த லொத்தர் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் (10-10-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன.
கொவிசெத்த 3471 மற்றும் 3477 சீட்டிழுப்புகளின் போது வெற்றியாளர்களாக தெரிவாக அதுருகிரிய எம்.ஏ. ரசாஞ்சலி பெரோரா (ரூ. 61,271,108.00) மற்றும் மத்துகம கே. சமிந்த ஜெயவிக்ரம (ரூ. 60,503,772.80) ஆகியோருக்கு காசோலை வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி. யாப்பா அபேவர்தன, பணிப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.