நள்ளிரவு முதல் அமுலாகிறது பயணக்கட்டுப்பாடு
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இச்சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கொரோனா அச்சுறுத்தலினைக் கருத்திற் கொண்டு, மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.