சர்வதேச ஶ்ரீமத் பகவத்கீதை மகோற்சவம் இலங்கையில்
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத்கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வணக்கத்துக்குரிய மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும்.
அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பபட்டுள்ளதுடன் 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரனையுடன் எதிர்வரும் (01.03.2024) ஆம் திகதி முதல் (03.03.2024) ஆம் திகதி வரை தாமரை தடாக வளாகத்தில் நடாத்துவதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.