இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாணய நிதியம்!
சீனாவுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சீனா பெரிய கடன்வழங்கும் நாடு இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் சாதகமான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் (Krishna Srinivasan) தெரிவித்துள்ளார்.
22 மில்லியன் மக்களை கொண்ட நாடு அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
பலமாத எரிபொருள் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டினை தொடர்ந்து உருவான பாரிய மக்கள் எழுச்சி காரணமாக முன்னைய ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
அரசாங்கம் சமீபத்தில் எரிபொருள் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்த தீர்மானித்தது. இலங்கை சீனாவிற்கு 6.5 பில்லியன் டொலர்க கடனை செலுத்தவேண்டியுள்ளது என சர்வதேச நிதி நிறுவகம் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு பெருந்தெருக்கள் துறைமுகம் விமானம் நிலையம் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. ஜப்பான் இந்தியாவும் இலங்கைக்கு கடன்களை வழங்கியுள்ளன.
இலங்கை அதற்கு கடன்வழங்கிய தனியார் மற்றும் அரச கடன்வழங்குநர்களிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும், என கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடன் பேணும் தன்மை மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக இதனை இலங்கை செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னரான தனது மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை மீட்சி திட்டமொன்றை முன்வைக்குமாறு சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ளது.
அடிப்படை இறக்குமிகளிற்கான பணத்தை செலுத்துவதற்காக பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை அதன் 12 பில்லியன் வெளிநாட்டுக்கடனில் பிணைமுறி கடன்கொடுப்பனவை செலுத்த முடியாமல் ஏப்பிரலில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
சில விடயங்களில் நாங்கள் முன்னேற்றத்தை காணவேண்டியுள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்ச்டை எட்டுவதற்காக இலங்கை முன்னெடுக்கவேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.