சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல்

Delhi India Crime
By Kirushanthi Mar 09, 2024 04:38 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

 சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB - என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல் | International Drug Trafficker Zafar Sadiq

சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர். போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல் | International Drug Trafficker Zafar Sadiq

இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (09.03.2024) கைது செய்துள்ளோம்.

போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல் | International Drug Trafficker Zafar Sadiq

இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

பின்புலம்: போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களை, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி   பொலிஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ இரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில்  (26)-ம் தேதி விசாரணைக்கு  முன்னிலையாகுமாறு  சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில்  பொலிஸார் கடந்த 23-ம் திகதி நோட்டீஸ் ஒட்டினர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல் | International Drug Trafficker Zafar Sadiq

ஆனால், விசாரணைக்கு அவர் தலைமறைவு ஆனார். அதன்பின், ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பொலிஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்கு சீல் வைத்தனர்.

மேலும், ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள்  பற்றி கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர்.

இதில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முகவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

அவர்களின் பட்டியலை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு  பொலிஸார் தயாரித்து வந்தனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்துனர் ஜாபர் சாதிக் கைது; விசாரணையின் போது வெளியான தகவல் | International Drug Trafficker Zafar Sadiq 

இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்தனர்.

மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில் தற்போது ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US