இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழுவுக்கு இடைக்காலத்தடை தீர்ப்பு: லஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்!
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழுவுக்கு இடைக்காலத்தடை தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிக்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (2023.11.09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர், நிர்வாகசபை தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கிரிக்கட் சபை இடைக்கால குழுவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை பயன்படுத்திக்கொண்டு கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் தற்போது பாரியளவில் பொருட்களை அங்கிருந்து அகற்றி வருவதாகவும் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை மீளப்பெறுவதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது .
எனவே ஊழல், மோசடி தொடரும் வகையில் தீர்ப்பளித்த நீதியரசருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இலங்கை கிரிக்கெட் சபை ஊழல் மோசடிமிக்கது என முழு இலங்கைக்கும் தெரியும். அதனால் நீதிமன்றத்துக்கு இது தெரியாது என தெரிவிக்க முடியாது.
நீதிமன்றம் விளையாடடுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக விளக்கம் கோராமல் இடைக்கால தடை விதித்தமைவுக்கு நீதியரசரின் உறவு முறைதான் காரணமா எனக்கேள்வி எழுப்பினார்.