உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்!

Food Shortages World Food Day Healthy Food Recipes Hyderabad
By Shankar Jul 03, 2022 07:08 AM GMT
Shankar

Shankar

Report

குழலையும் யாழையும் இனிது என்று சொல்பவர்கள் மழலையின் சொல் கேளாதவர்கள் என்பார் திருவள்ளுவர். அதே போன்று மற்ற உணவு வகைகளை சிறந்தது என்பவர்கள் பிரியாணியை சுவைத்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரியாணி தேசிய உணவாகி விட்டது.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

முன்பெல்லாம் திருமணம், விருந்து நிகழ்வுகளின் உணவாக இருந்த பிரியாணி இன்று சிலருக்கு அன்றாட உணவாகி விட்டது. வாரம் ஒரு முறை பிரியாணி உண்ணாதார் அரிது என்றும் சொல்லலாம்.

ஹைதராபாத் பிரியாணி

400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் மக்கள் மனதில் ஹைதராபாத் பிரியாணி என்பதாக இணைந்துள்ளது.

ஹைதராபாத் என்றால் சார்மினார் நினைவுச்சின்னம் நினைவுக்கு வருவதை விட பிரியாணி கண்டிப்பாக நினைவுக்கு வரும். இன்று பிரியாணி நமது உள்ளூர் உணவாக மாறியிருக்கலாம்.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

ஆனால் அது எங்கிருந்து எப்போது வந்தது என்பது பலரும் கேட்க விரும்பும் ஒரு கேள்வி. சில சோம்பேறி அறிஞர்கள் உடனே ஒரு கருத்தை தெரிவிக்கிறார்கள்.

அதாவது மத்திய ஆசியாவின் புலாவ் சோறு தான் வண்ணமயமான பிரியாணியாக மாற்றப்பட்டிருக்கிறதாம். ஆனால் இந்த கருத்து உண்மையல்ல. புலாவ் சோறும், பிரியாணியும் அடிப்படையில் இரு வேறு சுவை கொண்டவை.

பிரியாணி ஈரானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது. பிரியாணியின் மூல வார்த்தையான பிரிஞ் பிரியாண் என்பது பெர்சிய மொழியில்தான் இருக்கிறது. இதன் பொருள் வறுத்த சோறு. 

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

ஈரான் பிரியாணி

ஈரானில் நம்மூரில் தம் பிரியாணி என்று சொல்வது போல சமைக்கிறார்கள். பானையை மூடி வைக்கிறார்கள். அதன் மூலம் வேக வைத்தல் நிதானமாக நடக்கிறது.

இறைச்சியின் சாறுகளிலிருந்து இறைச்சி தானே வேகிறது. மேலும் அரிசி மற்றும் நறுமண மசாலாப் பொருட்களின் அடுக்குகளுடன் பிரியாணி தயாராகிறது.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

தற்கால ஈரானில் விற்கப்படும் பிரியாணியில் அரிசி இல்லை. காகிதத்தை விட மெல்லியதாக இருக்கும் ருமாலி ரொட்டியின் மேலே வேகவைக்கப்பட்ட இறைச்சியை வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

வளைகுடாவிற்கு சென்ற புனித பயணிகள் மூலம் பிரியாணி வந்தது?

பிரியாணி முகலாயர்களின் தான் இந்தியாவிற்கு வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது வளைகுடாவிற்கு சென்ற புனித பயணிகள் மற்றும் வீரர்கள், அரசு அதிகாரிகள் மூலம் தென்னிந்தியாவின் தக்காண பீடபூமிக்கு வந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

அதற்கு வெகு காலம் கழித்துதான் பிரியாணி சாலை மற்றும் கடல் மார்க்கமாக இந்திய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து அந்தந்த வட்டாரங்களின் உணவுப் பழக்கத்திற்கேற்ப பிராந்திய வடிவம் எடுத்தது.

மலபார் பிரியாணி

கேரளாவிற்குச் சென்றால் அங்கே மலபார் - மாப்ளா பிரியாணி பிரபலமானது. ஒரு காலத்தில் மீனும் இறாலும் இருந்த பிரியாணியில் கோழிக்கறியும், இறைச்சியும் இருக்கின்றன.

இங்கே மசாலா அதிகம் இருக்கும். ஹைதராபாத் பிரியாணியில் இருக்கும் ஒரு ஒத்திசைவு இங்கேயும் இருக்கும். கேரளாவில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறது மேற்கு வங்கம்.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

இங்கே வங்கதேசத்தின் தலைநகரம் டாக்காவின் பாணியில் இருக்கும் பிரியாணியை சுவைக்கலாம். இதில் மசாலா குறைவு. இந்த துறைமுக நகரத்திற்கு பிரியாணி கடல் மார்க்கமாக வந்திருக்கலாம்.

இந்தப் பிராந்தியத்தை ஆங்கிலேயருக்கு முன்பு நவாப் வம்ச அரசர்கள் ஆண்டார்கள். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் பிரியாணி ருசியுடன் சமைக்கப்படுகிறது.

அங்கு ஒரு காலத்தில் வந்த துரானி ஆப்கானியர்களோடு திரிபடைந்த பிரியாணியும் வந்திருக்கலாம். வடக்கு உத்திரப்பிரதேசத்தின் மொரதாபாத் பிரியாணியும் தலைநகர் தில்லியில் பிரபலம். ராஜஸ்தானில் பிரியாணி அந்த ஊரின் வாசனை பாணிக்கேற்ப மாறியுள்ளது.

உணவுகளின் ராஜாவான பிரியாணி கடந்து வந்த பாதையின் சுவாரஸ்ய தகவல்! | Interesting Information About The Journey Biryani

ஆஜ்மீர் சூஃபி தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு இந்த வகை பிரியாணியை வழங்குகிறார்கள். தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கேயே எத்தனை வகை பிரியாணி உள்ளது.

ஆம்பூர் பிரியாணி, செட்டி நாட்டு பிரியாணி, தலப்பா கட்டி பிரியாணி, மொகல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மூங்கில் பிரியாணி, தம் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி என்று விதவிதமான பெயர்களின் பார்க்கலாம்.

மேலும் கோழி, ஆடு, மாடு, மீன் என அனைத்து வகைகளுடன் இந்த பிரியாணியை நீங்கள் சுவைக்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு வட்டார பிரியாணியும் சுவையிலும் பரிணாம வளர்ச்சியிலும் வேறுபட்டிருந்தாலும் பிரியாணி என்றால் பிரியாணிதான். அதை அடித்துக் கொள்ள வேறு உணவு ஏதுமில்லை.



10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US