இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்புரை!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளவற்றை அகற்றுமாறு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, சுற்றுச்சூழல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளுடன் இந்த விடயம் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்து நேற்றையதினம் (06.10.2023) விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முறிந்து விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
தீயணைப்புப் படையினர் மற்றும் விமானப்படையினரின் கூட்டு முயற்சியில் பஸ்ஸுக்குள் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2000 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 500,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.