ஓமானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
ஓமானில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் இன்றையதினம் (16-07-2024) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துடன் பலர் காயமடைந்தனர்.
அல் -வாடி அல் -கபீர் பகுதியில் இலங்கையர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அந்த பகுதியில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் பொலிஸாரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.