உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவுறுத்தல் பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரமே இந்தத் தீர்மானம் பொருந்தும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடசாலை வரவு 80 வீதமாக இருக்க வேண்டுமென முன்னதாக அறிவித்த போதிலும் அது தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இவ்வருடத்திற்கான வரவு வீதத்தை 40 % ஆகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.