மட்டக்களப்பில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை ஸ்தாபிப்பு
கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டக்களப்பு தாதாந்தாமலை, 40 வட்டையடியில் ஸ்தாபிக்கப்பட்டு இன்றைய தினம் குட முழுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் 40வட்டை சந்தியில் இந்த பாலமுருகன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முருகன் புலனம் குழுவின் ஏற்பாட்டில் சுமார் 35 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலமுருகன் சிலை மற்றும் 40 வட்டை சந்தி பிள்ளையார் ஆலயத்தின் குடமுழுக்கு என்பன இன்று நடைபெற்றது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதன் போது விசேட யாக பூஜை,கும்பபூஜை நடைபெற்றதை தொடர்ந்து முச்சந்தி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பாலமுருகனுக்கு விசேட பூஜைகள் அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய இந்த குடமுழுக்கு பெருவிழாவில் நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.