கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சி: சுங்க திணைக்கள பரிசோதகர் கைது
மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சித்த சுங்க திணைக்கள பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொதி அமெரிக்காவிலிருந்து மாலம்பே பகுதியில் உள்ள நபருக்கு அனுப்பப்பட்டதாக சுங்க திணைக்கள ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சில சுங்க திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய குறித்த பொதி விடுவிக்கப்படவிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட குறித்த பொதியில் 3.2 கிலோகிராம் கஞ்சா எண்ணெய் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள சுங்க திணைக்கள பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.