அனுரவுக்கு விருந்து அளித்ததாக கூறிய கருத்து தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவிப்பு
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்துக்கும், அனுரவுக்கு விருந்து அளித்ததாக கூறிய கருத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் செயலாளர் என கூறிய ஒருவர் தங்கள் லலித் என்பவரையும் ஜனாதிபதி அனுரகுமாரவையும் சந்தித்தமை பற்றியும் கொழும்பில் போராட்டம் நடத்தியமை தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்
அதை விட விருந்தோம்பலில் பெயர் பெற்ற யாழ் மக்களின் மதிப்பை குறைக்கும் விதமாகவும் கதைத்திருந்தார்.
அவரின் மேற்படி கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதை தெரிவிக்கும் அதே வேளை அவர்கள் மிக அண்மையிலே எமது சங்கத்திற்குள் இணைந்து கொண்டனர் அதனால் அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் அவர்களின் தனிப்பட்ட நிகழ்வாகும்.
இதை நாங்களும் இன்றைய தினமே இந்த ஊடக சந்திப்பின் மூலம் அறிந்துள்ளோம்.
எனவே மேற்படி கருத்துக்களுக்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை சங்கம் தெரிவித்து நிற்கின்றது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.