திடீர் திடீரென முடிவை மாற்றுகிறாரா மஹிந்த?...பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தீர்மானம் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை முன்வைக்க எந்த கட்சியும் தயாராக இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமாயின் ஜனாதிபதி கொள்கை முடிவொன்றை மேற்கொண்டு புதிய பிரதமரை அறிவிக்க வேண்டும் என மஹிந்த கருத்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இல்லையேல் பிரதமரின் பதவி விலகல் அமைச்சரவையை கலைத்து குழப்பமான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலை தற்போதைய பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கையானது சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பேச்சுவார்த்தை வேலைத்திட்டத்தை பாதிக்கும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியை இராஜினாமா செய்வார் என அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை முன்வைக்க எந்த கட்சியும் தயாராக இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமாயின் ஜனாதிபதி கொள்கை முடிவொன்றை மேற்கொண்டு புதிய பிரதமரை அறிவிக்க வேண்டும் என மஹிந்த கருத்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இல்லையேல் பிரதமரின் பதவி விலகல் அமைச்சரவையை கலைத்து குழப்பமான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலை தற்போதைய பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கையானது சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பேச்சுவார்த்தைத் திட்டத்தை பாதிக்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.