பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி! விபரம் உள்ளே
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிந்திய தகவல்
பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி
பஸ் கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பஸ் போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணமும் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவுமாக கட்டணத் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.