சரசரவென உயரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்!
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஒருவாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிடுகிடுவென ஏறும் தங்கம் விலை
இந்தியாவில் நேற்று காலை தங்கம் விலை சிறிதளவு குறைந்த நிலையில் மாலை வேளையிலே மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
அதன் படி, 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் தங்கம் விலை
இந்நிலையில் இன்று ( 11 ) சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,450க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,600க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.