சிறுவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட பகீர் தகவல்!
நாட்டில் டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
நாட்டில் தற்போதைய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் பெரியவர்கள் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.