சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கைக்கு கடந்த மாதத்தை விட இந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (06-07-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.