எரிபொருள் விலை குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், மக்களின் விரக்தி மற்றும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
இதன்படி தற்போது சந்தையில் ஒரே விலையிலேயே எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எந்த தரப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(1) While I do understand the frustration and anger from the public, posts shared on MPs been given subsidized fuel rates is false. No MP from either side or anyone has been given subsidized rates than the current market prices given to the public.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 19, 2022