நாட்டிலிருந்து வெளியேறிய பசில் மற்றும் நாமல் மாமியார் ; பெரமுன வெளியிட்ட தகவல்
இலங்கையிலிருந்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடொன்றிற்கு சென்றுள்ளதை பொதுஜனபெரமுன உறுதி செய்துள்ளது.
இன்று காலை(20) அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள அவர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்காக நாடு திரும்புவார் என மொட்டுக்கட்சி தெரிவித்துள்ளது.
மருத்துவபரிசோதனை
மருத்துவபரிசோதனைக்காக அவர் முன்னரே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அவர் தனது பயணத்தினை அவர் தாமதித்தார் என பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது குறித்து அவர் கட்சிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார், அதேபோன்று மருத்துவபரிசோதனை முடிவடைந்த பின்னர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்கு கட்சிக்கு தலைமை தாங்குவதற்காக மீண்டும் நாட்டிற்கு திரும்புவேன் என பசில் தெரிவித்துள்ளார் எனவும் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
நாமலின் மாமி எங்கும் செல்லவில்லை
அதேவேளை நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் இன்று காலை தனது மாமியார் , மாமனார் மற்றும் 2 பணியாளர்களுடன் வெளிநாடு சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று காலை கதிர்காமம் கிரிவேஹேரில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் நாமல் ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.