முல்லைத்தீவு கடலில் மாயமான 2வது நபரின் சடலமும் மீட்பு
முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 2வது நபரின் சடலம் சற்று முன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் அடித்து செல்லப்பட்டு வவுனியாவைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களில் 2வது நபரின் சடலம் முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில்மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் மதவுவைத்தகுளம் வவுனியாவைச் சேர்ந்த தனுஜன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
நேற்று மாலை வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் சிக்கி விஜயகுமாரன் தர்சன் (தோனிக்கல் வவுனியா) சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம் வவுனியா) மற்றும் மனோகரன் தனுஷன் (மதவுவைத்தகுளம் வவுனியா) ஆகியோர் காணமல் போயிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
1) முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்ற மூவருக்கு நேர்ந்த நிலை! தேடும் பணி தீவிரம்
2)முல்லைத்தீவில் கடலில் காணாமல் போன வவுனியாவில் மூவர்...ஒருவர் சடலமாக மீட்பு
