கோட்டாபய மாலைதீவில் தங்கிய ஹோட்டல் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் அங்குள்ள மிகப் பெரிய ஹோட்டலான Waldorf Astoria Ithaafushi என்ற ஹோட்டலில் தங்கி இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஹோட்டல் பிரபல வர்த்தகரான மொஹமட் அலி ஜானா என்பவருக்கு சொந்தமான ஹோட்டல்களில் ஒன்று. இந்த வர்த்தகர் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட்டுக்கு நெருக்கமானவர்.
இந்த ஹோட்டலின் ஊழியர்கள், இலங்கை ஜனாதிபதி அங்கு தங்கியிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் இலங்கை ஜனாதிபதி அங்கு தங்கியிருந்தமை தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 5 ஆயிரத்து 903 அமெரிக்க டொலர் முதல் 8 ஆயிரத்து 760 அமெரிக்க டொலர்கள் வரை கட்டணம் அறவிடப்படுகிறது.
மாலைதீவு அரசாங்கம் இதுவரை இது சம்பந்தமாக எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.