புதிய எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் என்று எப்படி அடையாளம் காணுவது. புதிய எரிவாயு சிலிண்டர்களை பொலித்தீன் உறை நிற மாற்றத்தின் மூலம் அடையாளம் காணலாம். நுகர்வோர் விவகார அதிகார சபையின் வழிகாட்டல்களுக்கு உட்பட்டு மீண்டும் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிக்கலான சூழ்நிலையின் பின்னர் சந்தையில் வெளியிடப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அகற்றப்படும் பொலித்தீன் அட்டையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் (Litro Gas Cylinder) உள்ள பொலித்தீன் உறை வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிற இலச்சினையைக் கொண்டுள்ளது. அதேவேளை லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களில் (Laughs Gas Cyclinder) உள்ள பொலித்தீன் உறை மஞ்சள் நிறப் பின்னணியில் நீல நிற இலச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.