வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் விளக்கியுள்ளார்.
நேற்று (15) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்." தென் கொரியாவை எடுத்துக் கொண்டால், நாங்கள் சுமார் 7,600 வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்போம்.
இஸ்ரேல் அரசு சுமார் 15,900 வேலை வாய்ப்புக்களை வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். "SSW திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் 9,300 வேலை வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்." என்றார்.