பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான தகவல்
பாகிஸ்தானின் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பூதவுடல் இன்று கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார கடந்த வாரம், பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது படுகொலை இலங்கை முழுவதும் மட்டுமல்லாது உலகள்வில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
1)பிரியந்த குமார படுகொலை; முக்கிய சந்தேக நபர் சிக்கினார்
2)பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு


