சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய தகவல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர கல்வி வலயத்திற் குட்பட்ட பாடசாலை அதிபர்கள் பரீட்சைகள் திணைக் களத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரி வித்துள்ளார்.
ஏனைய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்குத் தபால் மூலம் நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனு மதிப்பத்திரங்களும் இன்று தபால் மூலம் அனுப்பப் படவுள்ளது.
அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட் சை ஏற்பாட்டுப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 4,513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சையில் 6 22,352 பரீட்சார்த்திகள் தோற்ற வுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.