இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கான தகவல்
நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், உடலில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
ஆபத்து
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், மூளைக்கு ஆபத்து, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகள் சரியான உணவுமுறை பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருப்பது அவசியமாகும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி உடலுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது தவறு, இது நீரிழிவு நோயாளிகளுக்கு விஷம் போன்றது.
கோதுமை மாவின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூடுதலாக அதிகரிக்கச் செய்கிறது.
சர்க்கரை நோயாளிகள் எந்த மாவு ரொட்டிகளை சாப்பிட வேண்டும்?
சோள மாவு
சர்க்கரை நோயாளிகள் சோள மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை சாப்பிடுவது நன்மை பயக்கும்.சோள மாவு ரொட்டியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சோளத்தில் நார்ச்சத்து இருக்கிறது இது தவிர இதில் புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
கொண்டைக்கடலை மாவு
கொண்டைக்கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
ராகி ரொட்டி: ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.