இஷாரா வெளியிட்ட தகவல்; சிக்கவுள்ள அரசியல்வாதிகள்!
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த விசாரணையில் பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களுக்கு சிவப்பு பிடியாணை
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்களை கைதுசெய்ய அனைவரும் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவின் விசாரணையின்போது, ஒகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பிறகு, 07 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 06 கைத்துப்பாக்கிகள், 09 ரிவால்வர்கள், இரண்டு ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.