ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரஸ்பரம் முரண்பட்டுள்ளனர்.
அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் SJB நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அறிவித்திருந்த போதிலும், ரம்புக்வெல்லவுக்கு எதிராகவும் மருந்து கொள்வனவு மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைதே செய்ய வேண்டும் என SJB தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
“அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், டெண்டர்கள் இன்றி வாங்கப்பட்ட தரம் குறைந்த மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கொண்டு வருவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் அத்தநாயக் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில் 250 முறைக்கு மேல் டெண்டர்கள் இன்றி மருந்துகள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையை நடத்திய துணைக்குழுவுக்கு நான் தலைமை தாங்கியதால் இதை நான் அறிவேன், ”என்று அவர் மேலும் கூறினார்.