துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
கொட்டாஞ்சேனை 06ஆம் ஒழுங்கையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான பூங்கொடி கண்ணாவின் உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற கஞ்சிபான இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவத்தின் சந்தேகநபர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்தவரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதன்போது கொட்டாஞ்சேனை ஜினாநந்த மாவத்தையை சேர்ந்த 30 வயதான ரவீந்திரன் தீபன் என்பவர் காயமடைந்தார்.