இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்!
ஐசிசி ரி20 (ICC WorldCup 2021) உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணியின் சில வீரர்கள் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஐசிசி ரி20 போட்டித் தொடரில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) முதலிடத்தில் உள்ளார்.
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நடைபெற்ற போட்டியில் பெற்றுக்கொண்ட ஹாட்ரிக் விக்கெட்டுக்களுடன் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.
ஐசிசி ரி20 (ICC WorldCup 2021) உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களில் மஹீஸ் தீக்ஷன (Maheesh Theekshana) 6 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐசிசி ரி20 2021 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களில் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 4 போட்டிகளில் 214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பெத்தும் நிசங்க 2-வது இடத்திலும் சரித் அசலங்க 3-வது இடத்திலும் பானுக்க ராஜபக்ஷ 4-வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.