நாட்டை விட்டு புறப்பட்ட இந்தோனேசிய கடற்படைக் கப்பல்
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு நாட்டை விட்டு புறப்பட்டது.
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை போர்க்கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA - 367’, 2026 கடந்த 23 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.

இந்த விஜயத்தின்போது, கப்பலின் கட்டளை அதிகாரியாக, கமெண்டர் Annugerah Anurullah, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ஜகத் குமாரவுடன் கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டது.
அத்துடன், மேலும், குறித்த கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்புப் பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிடும் பயணத்திலும் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்றனர்.