யாழில் தனி நபர் போராட்டம்!
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்வு கிடைக்கப்பெறவில்லை
அது தொடர்பில் மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்
. தனக்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் வரும் காலத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பாதிக்கபப்ட்டவர் தெரிவித்தார்.
அதேசமயம் குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.