யாழ்.மாநகர சபை காணியை ஆட்டையைபோட்ட தனிநபர்; பாயும் நடவடிக்கை!

Jaffna Crime Nagalingam Vedanayagam
By Sulokshi May 26, 2026 12:50 PM GMT
Report

  யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் - வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் நகரில், புதிதாக அமையப்பெற்று வரும் மாநகர சபை கட்டடத்திற்கு அருகில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை காணியை ஆட்டையைபோட்ட தனிநபர்; பாயும் நடவடிக்கை! | Individual Appropriates Jaffna Municipal Land

சீ.வீ.கே. சிவஞானத்தால், முறைப்பாடு

அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக, சர்ச்சைக்குரிய ஆதனத்தை ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் அற்புதம்!

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் அற்புதம்!

குறித்த ஆதனமானது யாழ். மாநகர சபைக்கு உரித்தானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நில அளவைத் திணைக்கள வரைபடங்கள் என்பன தம்மிடம் உள்ளமை தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இதன்போது ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினர்.

என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள்.....பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள்.....பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

ஆயினும், ஆதனத்தின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சோலை வரியும் அறவிடப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

விடயங்களை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், குறித்த ஆதனம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான பெயர்மாற்றம் மற்றும் வரி அறவீட்டு விடயங்களைக் கையாண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

டிக்கோயா தம்பதி கொலை; கேக் வெட்டி கொண்டாட்டம்!

டிக்கோயா தம்பதி கொலை; கேக் வெட்டி கொண்டாட்டம்!

அத்துடன், முறையற்ற விதத்தில் தனிநபர் வசமாகியுள்ள குறித்த ஆதனத்தை மீள மாநகர சபைக்கு மீட்டெடுப்பதற்காகத் துரிதமாக நீதிமன்றப் பொறிமுறைகளை நாடுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த விசேட கள ஆய்வின்போது, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர், உரிய பிரிவின் கிராம அலுவலர் மற்றும் காணி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.  

மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நீர்வேலி, கொழும்பு, Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US