சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண்

Batticaloa Tamil nadu Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Feb 15, 2025 02:00 PM GMT
Report

  இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் | Indian Woman Sri Lanka Ewelry Business

கல்முனை பொலிஸாருக்கு தகவல்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் தொடர்பில் நகை கடை ஊழியர்கள் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் கல்முனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர்.

விபத்தில் சிக்கிய யாழ் ஜனனி; ஷூட்டிங்கில் நேர்ந்த துயரம்

விபத்தில் சிக்கிய யாழ் ஜனனி; ஷூட்டிங்கில் நேர்ந்த துயரம்

கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். அத்துடன் அவர் வசம் இருந்து மாதிரி நகைகளுடன் ஏனைய சில பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை!

சமீப காலமாக சுற்றுலா விஸாவில் இலங்கை வரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் மாதாந்தத் தவணை மற்றும் கடன் அடிப்படையிலும் நகை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மிகுந்த சிரமங்களின் மத்தியில் பல இலட்சம் ரூபாவில் உள்ளூரில் முதலீடு செய்து நகைத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இரு வாரத்திற்குள் இலட்சத்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இரு வாரத்திற்குள் இலட்சத்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இந்நிலையில் இவ்வாறானவர்கள் தொடர்பில் பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளீட்டு நகைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US