கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்திய போர்க்கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து,
இலங்கை கடலோர காவற்படை கப்பலான சுரக்ஷாவில் நிறுவப்பட்ட முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட கொள்கலனை, இந்திய கப்பல் முறையாக ஒப்படைத்தது. சுரக்ஷா என்பது, 2017 ஒக்டோபரில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மாற்றப்பட்ட ஒரு கடல்சார் ரோந்து கப்பலாகும்.
இந்தநிலையில், 2021 ஜூன், 2022 ஏப்ரல், மற்றும் 2024 ஜூனில், இந்த இந்திய கப்பலுக்கான உதிரி பாகங்களை, இந்திய கடற்படை நன்கொடையாக வழங்கியது.
மேலும், 2024 ஜனவரியில் கொள்கலன்களை நிரப்புவதில் இதேபோன்ற உதவியையும் வழங்கியது.
கொழும்பில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படையினருக்கு, INS குத்தார், தொழில்முறை பயிற்சிகளை நடத்தும். இதேவேளை, இந்தக் கப்பல் 2025, மார்ச் 06, அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.