அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய விசைப்படகுகள் ; பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம்
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய விசைப்படகுகள்
இதன்போது, இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுத்து, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.