ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி
ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் டேரல் மிட்செல் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தநிலையில்252 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.