மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டும் அவசரமாக இலங்கை வந்த இந்தியாவின் உயர்குழு
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்ட 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் சற்றுமுன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காகவே இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் நாட்டுக்கு இன்று காலை வருகை தந்துள்ளனர்.
4 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இந்திய பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.ஆனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
குறித்த குழுவினர் இன்று (23) காலை 09.20 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான K-3603 என்ற சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இக்குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவினர் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு அடுத்தகட்டமாக கிடைக்கப்போகும் இந்திய நிதியுதவிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கையின் புதுடில்லி உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை கடந்த வாரம், சந்தித்ததன் பின்னரே இந்த அதிகாரிகள் மட்ட பயணம் நிகழ்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.