சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் இரங்கல்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் நேற்றிரவு (30) கலமானார்.
இந்நிலையில் அவரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்தி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பந்தனின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கலில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்ற வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின் தொடர்ந்தார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு பெரும் இழப்பு என அவர் பதிவிட்டுள்ளார்.
My deepest condolences to the family and friends of veteran TNA leader R. Sampanthan. Will always cherish fond memories of meetings with him. He relentlessly pursued a life of peace, security, equality, justice and dignity for the Tamil nationals of Sri Lanka. He will be deeply… pic.twitter.com/vMLPFaofyK
— Narendra Modi (@narendramodi) July 1, 2024
அதேசமயம் இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக அரசியல்வாதியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.