ஜனாதிபதி அனுரவுக்கு இந்திய பிரதமர் மோடி விடுத்த அழைப்பு!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வழங்கியிருந்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதே மேற்படி அழைப்பை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து
சந்திப்பின்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தார்.
இதன்போது, இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, முன்னெடுத்துவரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பான ஜனாதிபதியின் X செய்தியில்,
சுற்றுலா, எரிசக்தித் துறை மற்றும் முதலீடுகள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன் யோசனைகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்றொழில், பொருளாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.