வெளிநாடொன்றில் மூன்று 3 தமிழருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியான தகவல்களில்,
தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
கேப்டனின் வாக்குமூலம் அவசியம்
இவர்கள் 'லெஜண்ட் அக்வாரிஸ் என்ற சரக்கு கப்பலில் 106 கிலோ 'கிரிஸ்டல் மெத்' போதைப் பொருளை கடத்தியதாக இந்தோனேசிய கடல் எல்லையில் அந்நாட்டு அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் கடத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என மூவரும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கப்பலின் கேப்டனை கடந்த 14-ம் தேதி நேரில் சாட்சியம் அளிக்குமாறு இந்தோனேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் அவர் நேரில் ஆஜராகாமல் 'ஜூம்' மூலம் குறைந்த நேரமே ஆஜரானர். இது கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் குற்றமற்றவர்கள் என்பதை உறுதிசெய்ய கேப்டனின் வாக்குமூலம் அவசியமாகும்.
இந்நிலையில் இந்தோனேசிய சட்டப்படி மூவருக்கும் மரண தண்டனை விதிக்கும்படி அந்த நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள குறித்த வழக்கில் ஏப்ரல் 14-ல் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.