பயண பொதியில் ஆபத்தான பொருள்; விமான நிலையத்தில் 24 வயது இந்தியப் பிரஜை கைது
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 5.1 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான VN-671 விமானம் மூலம், வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து இன்று அதிகாலை 1.15 மணியளவில் குறித்த நபர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவர் தனது பயணப் பொதிகளில் ஆடைகளுக்கு இடையில் ஏழு பொதிகளில் மறைத்து சுமார் 5.1 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.