ஆட்சி மாற்றம்; இலங்கை தொடர்பில் கலந்துரையாட இந்திய காங்கிரஸ் அழைப்பு !
இலங்கையின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கமானது அனைத்து கட்சிகளின் பங்கேற்பில் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அட்ஹர் ரஞ்சன் சவுத்ரி அட்ஹிர் ரஞ்சன் சௌத்ரி கோரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கருதி இந்த கூட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கூட்ட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கான செயற்பாட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் தொடரும் பிரச்சினைகள் காரணமாக ஏதிலிகள் இந்தியாவுக்கு வரக்கூடும். ஏற்கனவே இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு அலுவல்கள் குழுவை அழைத்து தகவல்கள் பகிர்ந்து கொண்டார்.
இந்த குழுவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உள்ளடங்கியிருந்தார் என்றும் காங்கிரஸின் மூத்த தலைவர் அட்ஹிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.