புதினுடன் கை குலுக்கிய இந்திய சிறுவன்!மோடிக்கு புகழாரம்
கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராவுல் ஜான் அஜுவின் ஏஐ சாதனைகளைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இவரது பணி பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்ப்பதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஷ்யாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஏஐ ஜர்னி 2026’ மாநாட்டில், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுடன் இணைந்து இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் உரையாடிய புதின், ‘ஏஐ ரீம் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான (சிடிஓ) அஜுவைச் சந்தித்தார்.
அப்போது அவர், “இறுதியில் உங்கள் பணி, பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ அழைப்பை நனவாக்க உதவுகிறது. ஏனெனில், இளைஞர்கள் தங்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்த அது உதவுகிறது” என்று அஜுவிடம் கூறினார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட ‘பிரிவு 301’ அறிக்கையில், உற்பத்தித் துறையில் அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வழிவகுக்கும் கொள்கைகளை இந்தியா பின்பற்றுவதாகவும், அதனால் ஏற்படும் உலகளாவிய சிக்கல்களைச் சரிசெய்யத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
‘ இணையத்தில் ‘இந்தியாவின் ஏஐ சிறுவன்’ என்றும் ‘ராவுல் தி ராக்ஸ்டார்’ என்றும் அழைக்கப்படும் அஜு, கேரளாவைச் சேர்ந்தவர். வழக்கமான பொறியியல், கணினி அறிவியல் பின்னணி இல்லாமல், வடக்கு எடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வணிகவியல் படித்துக்கொண்டே ஏஐ துறையில் தடம் பதித்துள்ளார்.
ஒன்பது வயதில் சுயவிருப்பத்துடன் தொழில்நுட்பத்தைக் கற்கத் தொடங்கிய அஜு, தற்போது ‘ஏஐ ரீம் டெக்னாலஜிஸ்’ மூலம் திங்க்கிராஃப்ட், ரெஸ்க்யூ ஏஐ, மீபாட் போன்ற ஏஐ கருவிகளை உருவாக்கியுள்ளார்.