உக்ரைன் - ரஷ்யா போர்: இந்தியாவை கோர்த்துவிடும் சீனா! பரபரப்பை கிளம்பும் புகைப்படம்
ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக சீன செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய தொடர்ந்து 13 நாட்களாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ரஷ்ய கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒளிவிளக்குகளால் இந்திய அரசாங்கம் அலங்கரித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த அலங்கரிப்பு மத்திய அரசின் நிகழ்ச்சி ஒன்றிருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், அது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலோ, ரஷ்ய கொடியை பிரதிபலிக்கும் வகையிலோ இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.