இலங்கையை இணைக்கும் பாலம் அமைக்க இந்தியா முன்மொழிவு!
நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரு நாடுகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை அமைப்பதற்கான யோசனையை இந்திய அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த திட்டம் புதிய திட்டம் அல்ல என்றும் 2002ல் இந்தியா இலங்கைக்கு முன்வைத்த திட்டம் என்றும் அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
கட்டப்பட உத்தேசித்துள்ள தரைப்பாலம்
அதன்படி, இலங்கையின் தலைமன்னாரிற்கும் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இடையே கட்டப்பட உத்தேசித்துள்ள தரைப்பாலம் ரயில்கள் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைகள் வெற்றியடைவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே மிகக் குறைந்த செலவில் போக்குவரத்து எளிதாக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த புதிய திட்டம் குறித்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.